மௌன விரதம் எழுத்து : பொன்.பனகல் பொன்னையா

1 0
Spread the love
Read Time:7 Minute, 36 Second

குளிருக்குக் குருவாய் இருக்கும் அந்த வெள்ளி நிலவு வீசும் இதமான இரவு நேரத் தில்… “ஏய், என்னாச்சு இன்னையோட நீ பேசி மூணு நாளாச்சு, தப்பு செய்றது மனிதஇயல்பு. அதுக்கான தண்டனைய அனுபவிக்கிறது அதுக்கு கிடைச்ச பரிசு. நான் செய்த தவறுக்காக நீ இருந்த மௌனவிரதத்துனால என் உள்ளம் சுத்தமாயிடுச்சு. இனிமேல இதுமாதிரி உன் மனசு புண்படும்படியா எதையும் செய்யமாட்டேன். என்னை நம்பு சுசி” என்றான் விழியின் ஓரம் பனித்துளியாய் பூத்திருந்த கண்நீரைக் கைக்குட்டை யால் துடைத்தபடி சுரேன்.

“உங்கள நம்பினதாலதான  ஊமையாய்ப் போனேன். கொஞ்சம் நம்ம வாழ்க்கையோட முன்பக்கத்தைப் புரட்டிப் பார்த்தா இந்த எண்ணம் உங்களுக்கு வந்திருக்காது.”

“முறந்த தாலதானே மதிக்கெட்டுப் போச்சு. ஏன் இப்படி வார்த்தையால என்ன கொல் லுற. தவறு செய்தவன் வருந்தித் திருந்தினா மன்னிக்க வேண்டியதுதான முறை. முறைப்படி நம்ம கல்யாணம் நடந்திருந்தா இந்தப் பிரச்சனைக்கு இடம் இருந்திருக் காது.  மூணு நாளா நான் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமில்லை. நம்ம கல்யாணத் துக்கு வீட்டுல நிச்சயம் பண்ணினதுக்கப்புறம் உங்களபத்தி நானும், என்னை பத்தி நீங்களும் தெரிஞ்சுக்க விரும்பினோம். அதுக்காக எங்க காலேஜ் பியூனுகிட்ட ஹாஸ்டல் அட்ரஸ் கேட்க, அவன் கொடுக்க, என்னைப் பார்க்க வந்து வார்டன் கிட்ட திட்டுவாங்க, இன்னும் எத்தனை எத்தனையோ… 

அதுமட்டுமா? நிச்சயம் செய்ததனால அதுக்குப் பின்னாடி பத்து நாளா நாம ரெண்டு பேரும் பழக ஆரம்பிச்சோம். கல்யாணம் உறுதியா நடக்கும்கிற தைரியத்துல என் மனசையே உங்ககிட்ட பறி கொடுத்தேன். அப்பதான் அந்த இடி எங்க அப்பா மூலமா வந்தது. ஆசையா வளர்த்த நம்ம காதல் ரோஜா கருகுகிற மாதிரியும், காதுல ஆசிட ஊத்துற மாதிரியும் ஒரு உணர்வு ஏற்பட்டது. கல்யாணத்துக்கப்புறமா அஞ்சு பவுனை மட்டும் இன்சால்மெண்டா போடு றேன்னு சொன்ன எங்கப்பாவை இன்சல்ட் பண்ணி, அச்சாகி வந்த கல்யாண பத்திரிகையைக் கொஞ்சம்கூட இரக்கமில்லாம அடுப்புல போட்டு எரிச்சாங்க உங்கம்மா. ஊர்வாய அடைக்க நாகமலையிலிருந்து வந்த நஞ்சப்ப ஜோசியன் நம்ம ஜாதகத்துல நேரம் சரியில்லை, கண்டம் இருக்குன்னு சொல்லி கல்யாணத்தை உடனே நிறுத்தி னான். அந்தக் கண்டம் விலகணும்னு சொன்னா என்னைக் கல்யாணம் செய்யக் கூடாதுன்னும், அப்படிச் செய்தா உயிர் பலி வாங்கும் உச்சமாதேவின்னு ஜாதகம் சொல்லுறதா, உங்கம்மா போட்ட பிச்சைக் காசுக்காக சாதகமா சொல்லிட்டான்.

எதார்த்தமா எல்லாத்தையும் நம்பின எங்கப்பா கல்யாணத்த நிறுத்தி வேறு மாப் பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்தாரு.

அதேபோலத்தான் உங்க வீட்டுலையும் நடந்துச்சு. பத்து நாள் மட்டும் பழகின நம்ம ளோட மனசு 20 வருசமா வளர்த்து படிக்க வச்ச அப்பா, அம்மாவோட பாசத்த நினைக்க மறந்திடுச்சு.

யாருக்கிட்டையும் எதுவும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறிய நாம எல்லாத் தையும் எதிர்(பார்)க்காம நம்ம கல்யாணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது. இதுநாள் வரைக்கும் நம்மள பெத்தவங்களும், உறவுக்காரங்களும் எட்டிக்கூடப் பார்த்ததில்லை. நாமளும் யாரையும் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனா ஜாதகம் சொன்ன மாதிரியும் எதுவும் நடக்கல. இந்தச் சூழ்நிலையில் வாழுற நாம அந்தரத்தில தொங்குகிற மாதிரி.

இந்த ஒழுக்கம், கட்டுப்பாடுங்கிற கயிற்றைப் பிடிச்சு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேரினா வாழ்க்கையில உயர்வடையலாம். இந்த லட்சியத்தோட வாழ்ந்தா இந்த ஊருலேயே தகுதியான வங்களா மதிக்கப்படலாம். இல்ல… இதுபோல தவறுகளைத் தொடர்ந்து செய்துக் கிட்டே இருந்தா, இதோ இப்பவே செத்துடலாம்” என்றவளின் முகத்தைப் பார்த்து வாய்விட்டு குழந்தைபோல் அழுதான் சுரேன். “சுசி, நான் என்ன, வேணுமின்னா இப்படி செஞ்சேன், எம்.ஏ., படித்த நான் உனக்காக உன்னிடம் மனதைப் பறிகொடுத்ததற்காக வீட்டைவிட்டு வெளியேறி உன்னைக் கல்யாணம் செய்துக்கிட்டேன்.

சராசரி பெத்தவங்களப் போல என்னைப் பெத்தவங்களும் வரதட்சணைக்கு ஆசைப் பட்டு 15 பவுன் போடச் சொல்ல, உங்கப்பா பத்து பவுன் போட்டு பாக்கிய பின்னால தருவதா சொல்ல. அதனால ஆத்திரமடைஞ்ச எங்கம்மா கல்யாணத்தை நிறுத்த ஜாதகத்தை சாதகமா பயன்படுத்த, அதையும் மீறி நாம கல்யாணம் செய்து, படிச்சப் படிப்புக்கு வேலை கிடைக்காததால டிரைவிங் பழகின நான் டிரைவரா போக. திடீர்னு ஏற்பட்ட பந்த்னால நீ சொன்னபடி தினமும் கிடைச்ச பணத்திலே சேமித்து வைக்காத தால இந்த மூணு நாளா செலவுக்குப் பணம் இல்லாம கடன் வாங்கினதுனால என் னோட நீ இருந்த மௌன விரதத்துனால மனசு சுத்தமாகித் தெளிவு கிடைச்சுடுச்சு. 

நாளைக்கே உன் பேருல பேங்கில அக்கவுண்ட் தொடங்குறேன். வரும் வருமானத் திலே சிறு பகுதியைச் சேமிச்சு வைப்போம். சிறு துளி பெரு வெள்ளமா ஒருநாள் மாறும். கடன்பட்டார் நெஞ்சம் போல எனக்  கம்பன் சொன்னதையும், உலகிலேயே கடனில்லா வாழ்வே துயரில்லா வாழ்வு என்பதையும் உணர்ந்த அந்த இளஞ்ஜோடிகள் நிம்மதியாகத் தூங்கினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!