புத்தாண்டில் ஒரு புதுக்கதை

0 0
Spread the love
Read Time:11 Minute, 41 Second

வயதான பல முதியவர்கள்,  மூதாட்டிகள் இன்று சமூக வலைதளங்களில் புலம்ப ஆரம்பித்து வருகின்றனர்.           

‘எங்க புள்ளைங்க எங்களைக் கவனிக்கிறதே இல்லை. நாங்க நடுத்தெருவுக்கு வந்துட்டாலும் அவங்க என்னன்னு கேக்கப் போறதில்லை.’ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புலம்பல் இது. 

ஒரு சில குடும்பங்கள் இந்த நிலையில் உள்ளதை நாம் மறுக்க முடியாது.  ஆனால் பெரும்பாலான குடும்பங்கள் இந்தியாவில் அப்படி இல்லை என்பது எனது சமூகப் பார்வை.   இந்தச் சிறுகதைப் பதிவை அந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு எனது நோக்கம் புரிய வாய்ப்பு உள்ளது. இன்றும் பல குடும்பங்கள் பாசத்தால் கட்டிப் போடப்பட்டுத்தான் உள்ளது.  இது நான் கண்ட பல குடும்பக் கதைகளின் தொகுப்பு என்றும் கொள்ளலாம்.  புதிய மொந்தையில்  பழைய கள்ளு”         

“ஏன் தாத்தா,  உனக்கு  என்ன வயசாவுது?“

“ஏண்டா பேரா,  உனக்கு எதுக்கு திடீர்னு இந்த சந்தேகம்?”          

“ரெண்டு நாள் முன்னாடி உன் பொறந்த நாளை வீட்டுலயே கொண்டாடினோம். நீ கேக்கெல்லாம் வேண்டாம்னு  சொல்லிட்டே.  அதனால அப்பா,  கேக் ஆர்டர் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாரு“

“அதுதான்  டிரைவரை ஏற்பாடு பண்ணி, வடபழனி முருகன் கோயிலுக் கெல்லாம் போய், நானும் பாட்டியும் சாமி தரிசனம் பண்ண, ஏற்பாடு செஞ்சு கொடுத்தானேடா.!”        

” வேலை நாள்ல வராம லீவு நாள்ல,  அப்பாவோட பொறந்த நாள் வந்திருந்தா ஜாம் ஜாம்னு நானே  டிரைவரா இருந்து அப்பா அம்மாவை அவங்க இஷ்டப்படி இன்னும் ரெண்டு மூணு கோயிலுக்கு எல்லாம் கூட்டிகிட்டுப் போயிருப்பேன். அது முடியாம போயிடிச்சின்னு அம்மாகிட்ட சொல்லிக் கிட்டிருந்தாரு.  நான் கேட்டேனே.”    

“இதையெல்லாம் நீ என் கேக்குறே?”

“நான் தூங்கறதா நெனைச்சி அவங்க என்னென்னவோ பேசிக்கிறாங்க தாத்தா.  இதுக்கெல்லாம் நான் என்ன செய்ய முடியும்?”                    —                 ” “ஒண்ணு செய்யலாம். நாளைலேர்ந்து நீ படுத்துக்கறதுக்கு என் ரூமுக்கு வந்துடு.”                                                 

“எங்க படுக்கறது..?”

“நம்ம கட்டில்தான் நாலு பேரு படுக்கலாமேடா? தாத்தா பாட்டிக்கு நடுவுல,  பேரன் நீ தாராளமா  படுத்துக்கலாமேடா..!”                                      —           “தாத்தா… நீ ஒம்பது மணிக்கு கொறட்டை விடற ஆளு.   நான் ராத்திரி பன்னண்டு மணி வரை லேப்டாப்புல பிஸியா இருக்கறவன்.”                        “படிக்கிறேன் பேர்வழின்னு அப்பா, அம்மாவை ஏமாத்திட்டு கேம்ஸ் வெளையாடிகிட்டு இருப்பே.  எனக்குத் தெரியாதா?”     

 “அப்பா , அம்மா ரெண்டு பேருமே ராத்திரி ஒரு மணி, ரெண்டு மணி வரை,  காலு , காலுன்னு PC லயே தானே தாத்தா இருக்காங்க.  நான் என்ன தான் பண்றது?  சரின்னு கொஞ்ச நேரம் டிக்கர் வெளையாடு வேன்.  திருடனைப் பிறக்க ஓடற போலீசா ஓடுவேன். அப்பிடியே தூங்கிடுவேன்.  அம்மா தான் வந்து எல்லாத்தையும் அணைச்சிட்டு படுப்பா”.                   —-      ” அப்போ,  க்ளாஸ் பாடம் ஒண்ணும் நீ  லேப்டாப்ல பாக்கற தில்லைன்னு சொல்லு.”                  —–       ” டூ மச்   தாத்தா நீ…  காட் ப்ராமிஸ்.  அப்பப்ப நான் ஆன்லைன் க்ளாஸ் பாடமும் படிக்கிறேனே தாத்தா. .. ”            —   ——–  பாட்டி உள்ளே வந்ததையே  கவனிக்காமல் இருவரும் மேலே பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.                                  —–      ” இருந்தாலும் அம்மா அப்பா ரெண்டு பேரும் டூ கஞ்சூஸ் தாத்தா.. தியேட்டர்ல போய் 70 mm  ல  காந்தாரா பாக்கப் போகலாம். வா’ ன்னு கூப்டா, மாட்டேன்னு சொல்றா  தாத்தா… இங்க மாடில தான்  ஹோம் தியேட்டர் ஸ்க்ரீன் இருக்கு இல்ல… அதுல பார்த்தா போதும்னு ஒன்லைன் சென்டன்ஸ் பேசிட்டு,    அவாவா ரூமுக்குப் போயிடறா ,  தாத்தா..”     –  –   … —          —-  “என் பையன் சொல்றதுல என்னடா தப்பு..? மெனக்கெட்டு உனக்குன்னு தானே அவன் தியேட்டரையே வீட்டுக்குள்ள கட்டி வச்சிருக்கான். அப்புறம் எதுக்கு வெளில போய் பார்க்கணும்? ”         —–      பேரன் பாட்டியையே பார்க்கிறான்.                                      —–       ” பாட்டி .. உன் புள்ளைய நீ பீத்திக்கோ. நான் வேணாம்னே சொல்லலை.   ஆனா, தியேட்டர்ல சினிமா பார்த்தா தான் எனக்குப்  பிடிக்கும்.”                                              —–        ” எனக்குத் தெரியும்டா.  நீ தியேட்டர்க்குப்  போறதே,  அந்தக் கண்ராவி  பாப்கார்ன் பாக்ஸ் வாங்கி  கொறிக்கறதுக்குத்தானே”.                 —-      ” ஆமாம்னே வச்சிக்கோ,  மிஸஸ்.  செல்லம்மா. அப்பிடி கொறிச்சிண்டே  சினிமா பாக்குற சுகம் ,  தனின்னு சொன்னா, நீ ஏத்துக்குவா  போறீங்க..?”                  —-        ” பாருங்கோ..   பேரன்,  பேரன் னு நீங்க குடுக்குற செல்லம்.   எங்கிட்டியே  என்னம்மா  பேசறான்?  அவனைக் குட்டிச் சுவராக்கிடப்போறேள்.  இன்னிக்கு நான் சொல்றேன்.  எழுதி வச்சிக்கிங்கோ .   இது தான் நடக்கப் போறது.”                      —-    ——-      ” நடந்தும் போகாது.  ஓடியும் போகாது ..  நீ கவலையே பட வேண்டாம்.        ஐ நோ வாட் ஐ டூ ,   பாட்டி.  ரெஸ்பான்சிபிள் ஸ்டூடண்ட் டுன்னு க்ளாஸ்ல பேர் வாங்கி இருக்கறவன் பாட்டி, நான்.”              ——-    ”  பாட்டிகிட்ட போய் இப்படித்தான் பேசுவாங்களா?”     ——     ” பின்ன,   வீட்டுல உன் பேத்தியா இருக்கா?    நான் அவகிட்ட போய் ,  இப்படிப் பேச?  ஸ்கூல் விட்டு வந்ததுலேர்ந்து ட்யூஷன் க்ளாஸ் போற வரை,  ரூஃபையே பாத்துகிட்டு இருந்தா  ,  அந்தக் கொடுமை புரியும் பாட்டி, உனக்கு.  நான் வேற யாருகிட்ட போய் இப்படிக் கொட்ட முடியும்?  உங்கிட்டயும், தாத்தா கிட்டயும் தான் நான் இப்படி ஃப்ரீடம் எடுத்து கிட்டுப் பேச முடியும்?   24 ஹவர்ஸ் ஸ்கூல் எங்கேயாவது இருக்கா பாரு.. என்னை அதுல சேத்திருங்கோ.  அங்கேயாவது எனக்கு ஃபிரண்ஸ்சுங்க இருப்பாங்க. நாங்க பாட்டுக்கு அடிச்சிகிட்டும், பிடிக்க கிட்டும் இருப்போம்.   இங்க என்ன பாட்டி இருக்கு?  சகாரா பாலைவனம் கூட பெட்டரா இருக்குமோன்னு எனக்குத் தோணுது.   ரூமுலேர்ந்து,  கம்ப்யூட்டர்லேர்ந்து வெளில வந்தா, உங்களைக் கவனிச்சிக்கவாவது என் அப்பா, அம்மா , உங்களுக்கு இருக்காங்க பாட்டி..  என்னைக் கவனிச்சிக்குவும் என்  தாத்தா பாட்டி தான் இருக்காங்களேன்னு நானும் எவ்வளவு நாள் பாட்டி,  எல்லார்கிட்டயும் சொல்லிகிட்டே இருக்க முடியும்?   ஐ டோன்ட் லைக் தட் சார்ட் ஆஃப் லைஃப் பாட்டி…  …. ஐ டோண்ட் வாண்ட்,  ஹோம் தியேட்டர். ஐ டோண்ட் வாண்ட் பாப்கார்ன் பேக்.  உங்க பையன் உங்ககிட்ட இது மாதிரி என்னிக்காவது இது மாதிரி சொல்றா மாதிரி,   நீங்க வச்சிரிந்தீங்களா?  நான் மாத்திரம் உங்ககிட்ட இந்த மாதிரி சொல்றா மாதிரி,  ஏன் உங்க பையன் என்னை மாத்திரம் மாத்திட்டான்னு’   நீங்க தான் போய் கேக்கணும், பாட்டி. அதுவரை, நான் இப்படித்தான் பேசுவேன் ,  பாட்டி….”                         —    ஒன்றுமே சொல்லாமல் உள்ளே போகிறான்,  பேரன்.        செய்வதறியாது    தாத்தாவும் பாட்டியு ம் ஒருவரை ஒருவர் சங்கடத்துடன் பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்.

-எழுத்தாளர் ஈஸ்வர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!