சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை பெண் சீனச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உடல் இறைச்சி 100% ஃபாண்டா ஃபிளெஷ் (சதை) மெட்டீரியல் சிலிகான் பாகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது. இந்த செயற்கை பெண் பொம்மையை ஒருமுறை சார்ஜ் செய்தால் 72 மணி நேரம் தடையின்றி வேலை செய்யும். ஆன்மா / ஆவி இல்லை. உணவு தேவையில்லை. இதன் சந்தை விலை ரூ.20,0000 + வரியுடன் “HOORI” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவில் செயல்படுவதால் எந்த மொழியையும் 99% துல்லியத்துடன் பேசக்கூடியது.
குறிப்பாக இந்திய இளைஞர்களைக் குறிவைத்து இந்த “ஹூரி”யை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த சீன நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதனால் இனிமேல் இந்திய இளைஞர்களுக்கு வரதட்சணை இல்லை பிரச்சினை இல்லை… ஜாதகப் பொறுத்தம் பார்க்கத் தேவை இல்லை. வாதங்கள் இல்லை, கோரிக்கைகள் இல்லை! இப்படிப்பட்ட ரோபோட் வரும் ஆண்டுகளில் விற்பனைக்கு வர உள்ளது என்று சில ஊடகங்களில் செய்தி பரவிவருகிறது.
அதோடு இது செக்ஸ் டாய்ஸ் என்கிற பெயரில் பொம்மையாக தயாரித்துள்ளனர். இது எந்த மொழியில் பேசவும், இடும் வேலை செய்யவும் கூடிய மனிதனுக்கு நிகரான பொம்மை. என்று தற்போது சம்க வலைத்தளத்தில் பரவிவரும் கருத்து தவறானது.
அந்த வீடியோவில் இருப்பது சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை பெண் இல்லை. அது ஒரு வீடியோகேம் கதாபாத்திரம்.
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ Playstation வீடியோ கேமில் உள்ள Detroit : Become Human என்ற வீடியோ கேமின் சோலி கதாபாத்திரம். Detroit : Become Human என்ற அந்த வீடியோ கேமின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் அந்தக் கதாபாத்திரம் பற்றிய செய்தியுடன் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ அவர்களது யூடியூப் பக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஷேர் செய்யப்பட்டது.
இது பற்றி அந்த வீடியோவில் பேசியவர், காம்ஸ்கி ஆண்ட்ராய்டுகளை மனிதனாக ஆக்க ஆரம்பத்திலிருந்தே எப்படி திட்டமிட்டார் என்பதை முன்பு நாங்கள் விவாதித்தோம். மேலும் அது எவ்வாறு மாறுகிறது என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். மைக்ரோசாப்ட், கூகுள், டெஸ்டா, ஓபன் ஏ.ஐ. போன்ற பெரிய நிறுவனங்களைப் பார்த்து, இந்த நிறுவனங்கள் AIஇல் ஆராய்ச்சி செய்வது எப்படி என்று நம் உலகில் ஆண்ட்ராய்டுகளை உருவாக்க வழிவகுக்கும்.
ஆண்ட்ராய்டுகள் இருக்கும் உலகம் எப்படி இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா, எனவே இந்த கேம் அதை மிகவும் சிறப்பானதாக்குகிறது” என்று பேசியிருக்கிறார்.
ஆகையால் புரளிகளைப் பார்த்து ஏமாறாதீர்கள்.
Sorce File