ஒட்டகங்கள் கடல் நீரை, அதுவும் அடர்த்தியான உப்பான சாக்கடல் நீரைக் கூட குடிக்கக்கூடியவை. இதனால் அதன் இரத்த அழுத்தம் உயராது. ஏனெனில் அதன் சிறுநீரகங்கள் தண்ணீரை வடிகட்டி சுத்திகரிக்க வல்லது. உப்பு நீரை சுத்திகரிக்கும் நிலையம் அதன் வயிற்றில் அமையப்பெற்றுள்ளது.
ஒட்டகங்கள் முட்செடிகளை உண்ணக்கூடியவை. அதன் வயிறு, குடல்கள் எதுவும் சேதமடையாது. ஏனெனில் அவற்றின் உமிழ்நீர் முள்ளைக் கரைக்கும் அமிலத்தைக் கொண்டுள்ளது. அவற்றை ரொட்டியும், பனிஸை போல சாப்பி உண்ணும். அதனால்தான் கிராமப்புற அரேபியர்கள் கைகள், கால்களில் முட்கள் குத்தினால் அந்த இடத்தின் மீது ஒட்டக உமிழ்நீரை வைப்பார்கள், அது முட்களை உருக்கிவிடும்.
ஒட்டகத்திற்கு இரண்டு கண் இமைகள் உள்ளன. ஒன்று மென்மையானது, மற்றது சதையினால் ஆனது. அதனால்தான் பாலைவன தூசிக் காற்றை ஈடுகொடுத்து நடக்க முடியும். அதன் கண்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படாது. ஏனெனில் அது மென்மையான கண் இமைகளை மட்டுமே மூடிக்கொள்ளும்.
ஒட்டகம் அதன் வெப்பநிலையை மாற்றிக்கொள்ளும் வல்லமை கொண்டது.
கடும் பனி நிலவும் பிரதேசங்களில் இருந்தால் அதன் வெப்பநிலையைக் கூட்டிக்கொள்ளும். அதி வெப்பமான பாலைவனப் பிரதேசத்தில் அதன் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்ளும்.
இந்த ஏற்பாடுகளையெல்லாம் கவனித்துப் பார்க்கும்படி வான் மறை வசனம் ஒன்று இப்படிச் சொல்கிறது:
“ஒட்டகங்கள் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று நீங்கள் கவனிக்கவில்லையா?”
அல்குர்ஆன் : 88-17
தமிழாக்கம் : இம்ரான் பரூக்