என்றும் வாழ்வார் வாலி || கவிஞர் இரா.இரவி
ஓவியம் வரையும் ரங்கராஜன் என்ற பெயரை ஓவியர் மாலிபோல வரைய வாலியானார்! ஓவியத்தில் உயர் புகழ் அடையாவிட்டாலும் கவிதையில் ராஜனாக உயர்ந்தார் வாலி! திருப்பராய்த்துறை பிறந்து திருவை அடைந்த வாலி திருவரங்கத்திற்குப் பெருமைகள் சேர்த்த வாலி! மயக்கமா கலக்கமா கவியரசு பாடல் கேட்டு...