பிரியாணி || எழுத்து : தேவிலிங்கம், வேதாரண்யம்
“அத்தாச்சி! அத்தாச்சி டி.வி.யில படம் போட்ருவாங்க! கேட்டை திறந்து விடுங்க அத்தாச்சி” என்று ஒருக்களித்த கதவின் வழியாக உள்ளே எட்டிப்பார்த்துக் கத்திக் கொண்டிருந்தான் கதிரவன். இளங்குருத்திலிருந்து சிறிது சிறிதாக, சிறு மரமாக மாறிக்கொண்டிருக்கும் வளரிளம் பருவம். வாரம்தோறும் வரும் சிறுவர் மலரைப்...