நினைவலைகள் தொடர்ந்து வந்தால்…7 || எழுத்து : விஜி முருகநாதன்
காதல் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் அரவிந்தை அணைத்தால், கொதிக்கத் தொடங்கியிருக்கும் அபர்ணாவும் அடங்குவாள். அவர்கள் காதலும் சாம்பலாகிவிடும். மனதுக்குள் நினைத்தவர் அழைத்தது அரவிந்தை. விசுவாசக் கணக்குப் பிள்ளையிடம் சொல்லி தங்கள் பெருந்துறை ரைஸ் மில்லுக்கு வரவழைத்தார். அதுவும் எப்படி வருவதும் போவதும் ரகசியமாக...