அரசு வேலையில் கட்டுப்பாடு || டெல்லி  முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

1 0
Spread the love
Read Time:10 Minute, 22 Second

கணவன், மனைவி  இருவரில் யாராவது ஒருவர் தான் அரசு சம்பளம் வாங்க வேண்டும். அது மாநில அரசாக இருந்தாலும் சரி. மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி. டெல்லியில் சட்டம் உடனடியாக அமுலுக்கு வருகிறது. இருவரில் ஒருவர் ராஜினாமா செய்தாக வேண்டும். கெஜ்ரிவால் அதிரடித் திட்டம்.

தற்பொழுது அரசு வேலையில் ஏமாற்று சக்திகள் அதிக அளவில், பல்வேறு மறைமுக வழியில் புகுந்து கொண்டதால், வேலையே செய்யாமல்  ஒரு லட்சத்திற்கும் அதிகமான சம்பளம் வாங்குவதால் மற்றும் குறைவான அரசு வேலையே இருப்பதால், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அரசு வேலை என்பது எட்டாத கனியாகவும், நிறைவேறாத கனவாகவும் உள்ளது. இதனால் படித்த பல குடும்பம் பல ஆண்டுகளாக  ஏழ்மை நிலையில் உள்ளது.

குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாய அரசு வேலை முதலமைச்சரின் புதிய திட்டம்.  இத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த மக்கள் அதிக ஆர்வம்.

ஏற்கனவே கணவன் மனைவி இரண்டு பேரும் அரசு பதவியில் இருந்தால், யாராவது ஒருவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது ஒருவர் பதவி பறிக்கப்படும். ராஜினாமா செய்தவர்கள் தனியார் துறையில் வேலை செய்யலாம். அவர்கள் அரசுத் துறையில் பணியாற்ற வேண்டும் என நினைத்தால், அதற்கு அரசும் சம்மதித்தால் அவருக்கு contract  சம்பளம் ரூ. 10,000 மட்டுமே வழங்கப்படும்.

திருமணம் ஆகாத,  ஏற்கனவே அரசு வேலையில் இருப்பவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்ய நினைத்தால், அவர்கள் யாராவது ஒருவர் கண்டிப்பாக அரசு வேலையை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அது  சட்டப்படி குற்றம்

இத்திட்டத்தின் படி  குறைந்தது ஒரு கோடிக்கு  அதிகமான சொத்து உள்ள குடும்பங்களுக்கு  அரசு வேலை கிடையாது. அவர்கள் PAN Card, Income tax விவரங்களை அரசு சோதனை செய்யும்.

கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர்  மத்திய அரசு ஊழியர் என்றால், நல்ல ஊதியம் பெறுபவர் என்றால் மற்றவருக்கு  மாநில அரசு வேலை கிடையாது.

இத்திட்டத்தின் படி எந்த ஒரு நபரும், வேலைக்கு சேர்ந்தது முதல் 30  வருடம் மட்டுமே அரசு வேலை செய்ய வேண்டும். அதற்கு மேல் வேலை செய்தால் குற்றம். ஏற்கனவே அரசு பதவியில் இருப்பவர்கள் வருமான வரித்துறையின் சோதனைக்கு உட்படுவார்கள். அவர்கள் சொத்து மதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருந்தால் அது குற்றம். மற்றும் பதவி பறிக்கப்படும்

இதன்படி புதிதாக அரசு வேலைக்கு ஆள் எடுக்கும்போது தற்போதுள்ள கல்வித் தகுதி, உடற்தகுதி,  எழுத்துத் தேர்வு தகுதி, ஜாதி தகுதி,  பிற சிறப்புத் தகுதி (வாரிசு தகுதி, தனியார் துறை அனுபவம், விளையாட்டு வீரர்கள்) மட்டும் இல்லாமல் கீழ்கண்ட புதிய  தகுதியும் கணக்கில் கொள்ளட்டும்.

  • ஒரு கோடிக்கு மேல் குடும்பச் சொத்து அல்லது வருமானம் இருக்க்ககூடாது.
  • குழந்தைகள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
  • இதுவரை அரசு  வேலை இல்லாத குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
  • ஏற்கனவே கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் மத்திய- மாநில அரசு வேலையில் இருந்தால் மற்றவர் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பதே குற்றம்.
  • கிராமத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை
  • வேலைக்குச் சேர்ந்தவர்கள் எந்தெந்தத் தகுதி அடிப்படையில் சேர்க்கப்பட்டார் என்ற விவரம் ஒளிவுமறைவின்றி தனியாக  வெப்சைட்டில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியப்படுத்தப்படும்.
  • ஒப்பந்தத் தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உள்ள விதவை பெண்களுக்கு முன்னுரிமை.

இப்படிப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்னும் உன்னதமான திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம்  கீழ்கண்ட நன்மைகள் நடைபெறும்.

  • குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை கிடைக்கும். சமூகத்தில் குற்றங்கள் குறையும்.
  • குடும்பத்தில் ஒருவர் அரசு வேலை செய்யும்போது அரசின் மற்ற திட்டங்களை மிக எளிதாக அவர் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்துவார்.
  • குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அரசு வேலை என்பதால், அரசியல் மற்றும் பண பலத்தால் ஒரே குடும்பத்தில் அதிக அரசு வேலை பெறுவோர் வேலை பறிக்கப்படும். அந்தப் பதவி மற்ற ஏழை குடும்பத்திற்கு வழங்கப்படும்.
  • பணக்காரர்களுக்கு அரசு வேலை கிடையாது என்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அரசு வேலை கிடைக்கும். வாழ்வு மகிழ்ச்சியாகும்.
  • திருமணம் ஆகாத அரசு ஊழியர்  இரண்டு பேர் திருமணம் செய்யும்  போது யாராவது ஒருவர் அரசு வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் அந்த வேலை இன்னொரு குடும்பத்திற்கு கிடைக்கும்.
  • குழந்தைகள் உள்ளவர்களுக்குப் புதிதாக அரசுப் பணியில் முன்னுரிமை என்பதால் அந்தக் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகும்.
  • 30 வருடத்திற்கு மேல் அரசு பதவியில் இருக்கக்கூடாது என்பதால் வீணாக அரசு அதிகார சுகத்தை அனுபவிப்பவர்கள் பதவி பறிக்கப்படும். அந்தப் பதவி மற்ற ஏழை குடும்பத்திற்கு கொடுக்கப்படும்
  • இதன்மூலம் தனியார் துறையில் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை செய்யும் ஏழை, நடுத்தர குடும்ப உறுப்பினர்கள் பல கோடி பேருக்கு அரசு வேலை கிடைக்கும்.
  • இதன் மூலம் இதுவரை அரசு வேலை இல்லாத குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்
  • ஏற்கனவே உள்ள தகுதியோடு கூடுதலாகச் சில தகுதிகளைச் சேர்த்துள்ளதால் சமுக நீதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்தந்த சமூகத்தில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்களுக்குக் கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும்.
  • கிராமத்தில் உள்ளவர்களுக்கு அரசு  வேலை கிடைக்கும்
  • எந்தெந்த   தகுதி  அடிப்படையில் வேலைக்கு சேர்ந்தார் என்ற விவரம்  வெப்சைட்டில் வெளியிடுவதால் அரசை ஏமாற்றி யாரும்  அரசு வேலையில் சேரமுடியாது. அப்படி சேர்ந்தாலும் அவர்கள்  மீது பொதுமக்கள் புகார் அளிக்க முடியும்.
  • ஒப்பந்தத் தொழிலாளர்   மற்றும் குழந்தைகள் உள்ள விதவை வாழ்வு வசந்தமாகும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்னும் இந்த உயரிய திட்டம் செயல்படுத்தப்படும்போது அனைத்து குடும்பமும் மகிழ்ச்சி அடையும்.

மொத்தத்தில்  அரசு வேலை என்பது ஏழை, எளிய,  நடுத்தர  மக்களின் வாழ்வாதாரத்தை உயர்துவதற்கும், லஞ்சம் ஊழல் இல்லாமல் நேர்மையாக பணி செய்வதற்கும்தான்.

பணக்காரர்களும், சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களும், அடிக்கடி போராட்டம் நடத்தி அரசை மிரட்டுபவர்களும், லஞ்சம் ஊழல் செய்பவர்களும், பரம்பரையாக அரசுப் பதவியில் இருப்பவர்களும், அரசை ஏமாற்றி குறுக்கு வழியில் வந்தவர்களும் நீக்கப்பட்டால் அரசு அலுவலகம் சிறப்பாக இயங்கும்.

மேலும் இத்திட்டத்தை தொடங்க நினைப்பது டெல்லியில் உள்ள ஏழை மக்களின் நாடித்துடிப்பை அறிந்த,  மக்களின் முதல்வர் கெஜ்ரிவால் அவர்கள். அவர் இரண்டு முறை முதல்வர் ஆனவர்.

இவரை போலவே மற்ற அனைத்து மாநிலங்களிலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் பெரும் எதிர்பார்பாக உள்ளது.  இவர் இந்தத் திட்டத்தைத் தொடங்க இருக்கிறார் என்பது அவரது கட்சியினர் மூலம் பொதுமக்களுக்குத் தெரியவந்தது. இதனால் அனைவரும் அவரை ஊடகம் மற்றும் சமுக வலைதளம் மூலம் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!